இந்திய மீனவர்கள் கைது விவகாரம் - இராமேஸ்வரத்தில் பணிப்புறக்கணிப்பு!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் இன்று மீன்பிடி நடவடிக்கையினை புறக்கணித்துள்ளனர்.
சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு, ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள், நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு கடற்பரப்புகளுக்கு அருகில் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் 15 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய மீனவர்கள் இன்று ஒருநாள் பணிப்புறக்கணப்பில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதில் 400இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
"இலங்கை அதிபர் AI உச்சி மாநாட்டில் பங்கேற்க புது தில்லி வந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நமது பிரதமர் நரேந்திர மோடி, இந்த சம்பவம் குறித்து இலங்கை அதிபரிடம் நேரடியாக முறையிட்டிருக்க வேண்டும்." என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்