வவுனியாவில் 36 வயது ஆசிரியர் காணவில்லை - பொதுமக்களின் உதவியை நாடும் குடும்பத்தினர்

#SriLanka #Vavuniya #Missing #Teacher
Prasu
5 months ago
வவுனியாவில் 36 வயது ஆசிரியர் காணவில்லை - பொதுமக்களின் உதவியை நாடும் குடும்பத்தினர்

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் வசித்துவரும் ஆசிரியரான அன்ரனி ஜோய் வயது 36 என்பவரை கடந்த மூன்று மாதங்களாக காணவில்லை என அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என அவர்கள் தெரிவிப்பதுடன் அவரது தொலைபேசியும் இயங்குநிலையில் இல்லை எனகூறப்படுகின்றது.

images/content-image/1771094841.jpg

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர். 

எனினும் இன்றுவரை அவர் தொடர்பான எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. 

எனவே படத்தில் உள்ள நபரை யாராவது கண்டால் ஓமந்தை பொலிஸ் நிலையத்தற்கோ அல்லது கீழேயுள்ள இலக்கங்களிற்கு அழைப்பினை ஏற்படுத்தியோ தகவலை தெரிவிக்குமாறு அவரது குடும்பத்தினர் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

தொடர்புகளுக்கு

0777444117

0772011106

0743072802

images/content-image/1771094865.jpg

images/content-image/1771094879.jpg

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4