யாழில் கூர்மையான ஆயுதம் மற்றும் 09 இலட்சம் ரூபாய் பயணத்துடன் 9 சந்தேகநபர்கள் கைது

#SriLanka #Jaffna #ARREST #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
யாழில் கூர்மையான ஆயுதம் மற்றும் 09 இலட்சம் ரூபாய் பயணத்துடன் 9 சந்தேகநபர்கள் கைது

கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 9 லட்சம் ரூபாய் பணத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பெண் உட்பட 09 பேர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாண நகருக்கு அருகில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், குறித்த குழுவினரை வழிமறித்து சோதனையிட்டதையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது அவர்கள் ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காரின் உள்ளே பல கூர்மையான ஆயுதங்களும் 9 லட்சம் ரூபாய் பணமும் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, அந்த ஒன்பது சந்தேக நபர்களையும் கைது செய்த பொலிஸார், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றினர். 

 சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதோடு, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

 இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!