மத்தியக் கிழக்கு கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் போர் கப்பல்!

#SriLanka #Iran #Trump
Thamilini
4 months ago
மத்தியக் கிழக்கு கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்காவின் போர் கப்பல்!

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் ( USS Gerald R Ford) மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  

. இந்த போர்க்கப்பல், துணை கப்பல்களுடன், வரும் நாட்களில் கரீபியன் தீவுக்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் உறுதி செய்யப்படாவிட்டால், இரண்டாவது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருவதாக ட்ரம்ப்  முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும் ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகர் ஒருவர், நாட்டின் ஏவுகணை திறன்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல என்று உறுதிப்படுத்தினார்.   

 இதற்கிடையே இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த கப்பல் மத்திய கிழக்கு கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4