வங்கதேசத்தில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட இந்து நபர்

#Hindu #Death #Election #Murder #Bangladesh
Prasu
4 months ago
வங்கதேசத்தில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட இந்து நபர்

வங்கதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் மாணவர் இயக்க தலைவர் கொலை செய்யப்பட்டதையடுத்து வன்முறை ஆரம்பித்தது. 

இதில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. இதுவரை 10க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் நிலையில்,ஒரு இந்து நபர் கொலை செய்யப்பட்டு உள்ளார். 

மவுல்விபசார் மாவட்டம் சம்பா பகுதியில், தேயிலை தோட்டத்தில் 28 வயது ரத்தன் சஹு வாகர் என்பவர் பணிபுரிந்து வந்தார்.

இவர் கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடலில் கடுமையான வெட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4