சட்டவிரோத படகு பயணம் - 50 பேர் மாயம்!

#SriLanka #Boat #Missing #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
சட்டவிரோத படகு பயணம்  - 50 பேர் மாயம்!

லிபியா கடற்கரையில் குடியேறிகள் படகு கவிழ்ந்ததில் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. 

 இரண்டு பெண்கள் மட்டுமே மீட்கப்பட்டதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்த இரண்டு நைஜீரிய பெண்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி மாதத்தில் மட்டும் மத்தியதரைக் கடலில் குறைந்தது 375 புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

 நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது, ஆனால் உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4