வங்கதேசத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர்

#Death #Minister #Bangladesh #Court #custody
Prasu
4 months ago
வங்கதேசத்தில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர்

மூத்த அவாமி லீக் தலைவரும், முன்னாள் அமைச்சரும், கல்வியாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான 86 வயது ரமேஷ் சந்திர சென், நீதிமன்றக் காவலில் காலமானார்.

2024 ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அரசு பதவி விலகிய பிறகு, அவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் சுமத்தப்பட்டு தினாஜ்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறையில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் தினாஜ்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமின் வழங்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4