பிரான்சில் உளவு குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது
#China
#Arrest
#France
#Youngster
#Spy
Prasu
2 months ago
பிரான்ஸில் இரண்டு சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேம்ப்ளேன்ஸ்-எட்-மெய்னாக் பகுதியில் உள்ள தோட்டத்தில் மிகப் பெரிய ஆண்டெனாவை அமைத்த போது குடியிருப்பாளர்கள் சந்தேகப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான பொது இயக்குநரகம் ஏஜென்சியின் அதிகாரிகள் அவர்களின் வீட்டை சோதனை செய்தபோது ஏராளமான கணனிகள் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 29 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் மீது “வெளிநாட்டு சக்திக்கு தகவல்களை வழங்குதல், தகவல் திருட்டு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
(வீடியோ இங்கே )