பசிபிக் பகுதியில் பிரெஞ்சு கடற்படையினரால் 4.24 டன் கொக்கைன் பறிமுதல்

#France #drugs #Boat #Smuggling
Prasu
5 months ago
பசிபிக் பகுதியில் பிரெஞ்சு கடற்படையினரால் 4.24 டன் கொக்கைன் பறிமுதல்

தெற்கு பசிபிக் பகுதியில் உள்ள ஒரு கப்பலில் இருந்து நான்கு டன்களுக்கும் அதிகமான கொக்கைனை பிரான்சின் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. 

மேலும் கரீபியன் கடலில் கொக்கைன்கடத்தும் படகையும் தடுத்து நிறுத்தியதாக அந்நாட்டின் ஆயுதப்படை அமைச்சர் தெரிவித்தார். 

பசிபிக் பகுதியில் 4.24 டன் கொக்கைன்பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 678 கிலோகிராம் கோகைனை ஏற்றிச் சென்ற படகு கரீபியனில் தடுத்து நிறுத்தப்பட்டு பார்படாஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமெரிக்காவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குச் செல்லும் என்று நம்பப்படும் பசிபிக் பகுதியில் உள்ள கப்பல் பிரெஞ்சு பாலினீசியாவில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தீவுப் பகுதியில் உள்ள அந்நாட்டின் உயர் ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4