இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு துணை நிற்கும் சர்வதேச நாணய நிதியம்!
#SriLanka
#Switzerland
#IMF
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெறும் 2026 உலக பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய IMF இன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சந்தித்துள்ளார்.
இதன்போதே மேற்படி உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஜார்ஜீவா, "டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை எதிர்கொள்வதில் இலங்கையும் அதன் மக்களும் குறிப்பிடத்தக்க மீட்சியைக் காட்டியுள்ளனர்.
நாட்டின் பொருளாதார மீட்சியை ஆதரிப்பதில் IMF இன் உறுதிப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்தினேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்