மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் - மக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#Batticaloa
#Fever
#Dengue
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 hour ago
வெள்ளம் மற்றும் பருவமழையைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக மட்டக்களப்பு பிரதேச சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் சுகாதார அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
400க்கும் மேற்பட்ட வீடுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் டெங்கு லார்வாக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சம்பந்தப்பட்ட திரையரங்கு மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அத்துடன் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் போக்கு உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் lanka4.com ஊடகத்துடன் இணைந்திருங்கள்