மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு இடுப்பு எலும்பு முறிவு
#Hospital
#Malasia
#Former President
Prasu
18 hours ago
மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்த டாக்டர் மகாதீர் கடந்த ஆண்டு ஜூலையில் மகாதீர் முகம்மது தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்நிலையில், மகாதீர் தனது இல்லத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் கோலாலம்பூரில் உள்ள தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
டாக்டர் மகாதீர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )