இந்திய அறிவியலாளர்கள் இருவருக்கு கனடா அரசு வழங்கிய உயரிய கௌரவம்
#Canada
#government
#Award
#Indian
Prasu
2 days ago
இந்தியாவில் பிறந்த அறிவியலாளர்களான ப்ரவீன் கே ஜெயின் மற்றும் சந்த்ரகாந்த் ஷா என்னும் அறிவியலாளர்கள் இருவருக்கு, ஆர்டர் ஆப் கனடா என்னும் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் பொது சுகாதாரம் ஆகிய துறைகளில் அவர்களின் பங்களிப்பிற்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ப்ரவீன் ஒன்ராறியோ குயீன்ஸ் பல்கலையிலும், பேராசிரியர் சந்த்ரகாந்த் ரொரன்றோ Dalla Lana School of Public Healthஇலும் பணியாற்றிவருகிறார்கள்.
கௌரவிக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ள கனடா பிரதமரான மார்க் கார்னி, சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், உங்கள் பங்களிப்புகள், ஒரு துடிப்பான, ஒன்றிணைந்த மற்றும் வலிமையான கனடாவைக் கட்டியெழுப்ப உதவியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )