முக்கிய பேச்சுவார்த்தைக்காக சீனா சென்ற பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்
#China
#Pakistan
#Minister
#Foriegn
#Visit
Prasu
1 day ago
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் 7வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.
வெளியுறவு மந்திரிகளின் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இஷாக் தார் சீனாவுக்கு புறப்பட்டு சென்றார்.
இதுபற்றி பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட செய்தியில், சீன வெளியுறவு மந்திரியின் அழைப்பையேற்று சீனாவுக்கு தார் சுற்றுப்பயணம் செய்கிறார்.
2026ம் ஆண்டில், சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டின் முதல் முக்கியஸ்தராக தார் இருப்பார்.
இந்த பேச்சுவார்த்தை கூட்டத்திற்கு தார் மற்றும் வாங் யி இருவரும் கூட்டாக தலைமையேற்பார்கள் என தெரிவித்துள்ளது.
(வீடியோ இங்கே )