மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமியை கைது செய்ய உத்தரவு

#Arrest #TamilCinema #Director #Movie #Fraud
Prasu
3 hours ago
மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமியை கைது செய்ய உத்தரவு

செக் மோசடி வழக்கில் ஆனந்தம், பீமா, சண்டகோழி பிரபல திரைப்படத்தை இயக்கிய லிங்குசாமியை கைது செய்ய அல்லிக்குளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 2016ம் ஆண்டு ரூ.35 லட்சம் பணத்தை ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை லிங்குசாமி திருப்பி செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடனை வட்டியுடன் ரூ.48.68 லட்சத்தை செலுத்துமாறு அந்த நிறுவனத்தில் மேலாளர் கூறியுள்ளார். இந்நிலையில் லிங்குசாமி மற்றும் திருப்பதி பிரதர்ஸ் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என சென்னை அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடனாக பெற்ற தொகையை வட்டியுடன் ரூ.48.68 லட்சமாக 2 மாதத்திற்குள் திருப்பித்தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!