கனடாவின் பல பகுதிகளில் கடும் குளிர்கால வானிலை எச்சரிக்கை விடுப்பு
#Canada
#people
#Cold
#Warning
#Climate
Prasu
3 hours ago
கனடாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர்கால வானிலை எச்சரிக்கைகள் அமலில் உள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அட்லாண்டிக் கனடாவைத் தவிர, அனைத்து மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கும் வானிலை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய கனடா பகுதிகளை நோக்கி நகரும் அபாயகரமான வானிலை அமைப்பின் காரணமாக, ப்ரெய்ரி மாகாணங்களில் 30 செ.மீ. வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தெற்கு சஸ்கட்ச்வான் மற்றும் மானிடோபா பகுதிகளில் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாகாணங்களின் சில பகுதிகளில், பனிப்பொழிவு தொடங்குவதற்கு முன் உறைமழை பெய்யும் வாய்ப்பும் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )