பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் லூவ்ரே அருங்காட்சியக ஊழியர்கள்
#France
#Protest
#Workers
#museum
Prasu
11 hours ago
பிரான்சில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் சமீபத்தில் இடம்பெற்ற கொள்ளை மற்றும், நீர் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம் திட்டமிட்டபடி திறக்கப்படவில்லை என்றும் பார்வையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் லூவ்ரேவின் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் தொழில் சங்கங்களுக்கும், கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )