சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசு
கடந்த 2003ம் ஆண்டு முதல் சென்னையில் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்(Indo Cine Appreciation Foundation) சர்வதேசத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது.
அந்த வகையில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்த மாதம் 11 முதல் 18 வரை சென்னை PVR அரங்கில் நடைபெற உள்ளது. 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. அவற்றில் 13 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும்.
இந்நிலையில், இதில் 12 தமிழ் படங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், பறந்து போ, 3BHK, அலங்கு, வேம்பு, பிடிமண், காதல் என்பது பொது உடைமை, மாயக்கூத்து, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ், மெட்ராஸ் மேட்னி, மருதம் ஆகிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து நடிகர் ரஜினிகாந்திற்கு, 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா விருதை பெற்றுக்கொண்டார்.
(வீடியோ இங்கே )