பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை பேசுவது நாடகம் அல்ல.. பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி...
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்திற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி கூட்டத்தொடரை நாடகத்திற்கான மேடையாக மாற்றாதீர்கள் என்று எதிர்கட்சிகளை விமர்சித்தார்.
இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் மோடிக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தி, கூட்டத்தொடரின் போது SIR மற்றும் டெல்லி மாசுபாடு போன்ற முக்கியமான பிரச்சினைகளை எழுப்புவது எப்படி நாடகமாகும்.பொது நலன் சார்ந்த விஷயங்கள்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைகள் குறித்து எந்த விவாதமும் இல்லாதபோது பாராளுமன்றத்தின் பயன் என்ன? கடந்த 11 ஆண்டுகளாக பாராளுமன்ற அமைப்பையே மத்திய அரசு சீர்குலைத்துள்ளது.

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் மட்டுமே குறைந்தது 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன.
சில மசோதாக்கள் வெறும் 15 நிமிடங்களிலும், சில மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமலும் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள், ஜிஎஸ்டி போன்ற மசோதாக்களை பாராளுமன்றத்தில் புல்டோசர் மூலம் நீங்கள் எப்படி கொண்டு வந்தீர்கள் என்பதை முழு நாடும் பார்த்தது.
பணிச்சுமையால் SIR பணிகளில் ஈடுபடும் பிஎல்ஓக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். அவையில் இவற்றை பற்றி பேசுவதையோ அல்லது பொதுப் பிரச்சினைகளை எழுப்புவதையோ நாடகம் என்று அழைப்பது சரியல்ல.
பொதுப் பிரச்சினைகள் குறித்த ஜனநாயக விவாதங்களை அனுமதிக்காதது தான் நாடகம்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே எதிர்கட்சிகள் அமளியால் பாராளுமன்றம் இன்று 2 முறை ஒத்திவைக்கப்பட்டது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
