இளஞ்செழியனின் மறுமுகம் சர்ச்சையா? உண்மையா? விபரம் உள்ளே

#SriLanka #Switzerland #Judge #Politician #Politics
Prasu
1 hour ago
இளஞ்செழியனின் மறுமுகம் சர்ச்சையா? உண்மையா? விபரம் உள்ளே

நீதிபதிகள் சட்டத்தரணிகள் அரசியலுக்கு வரவேண்டும் என்னும் வாதம் தப்பானது .

முதலமைச்சர் பதவி என்பது மாகணசபையைப் பொறுத்தவரையில் அபிவிருத்திக்கான இடமே அல்லாமல் , சட்டவாக்கல் சபை அல்ல .

சட்டவாக்கல் சபை பாரளுமன்றம் . சட்டத்துறை சார்ந்தவர்கள் பாரளுமன்ற பிரதித்துவத்தைப் பெறலாம் . தவறல்ல . ஆனால் மாகணசபை!

நல்ல தொரு வினைத்திறனும் , நேர்மையும் , திட்ட அமுல்படுத்தல் அனுபவும் உள்ள ஒரு இலங்கை நிர்வாகசேவை அலுவலர் ஒருவரே மாகண முதலமைச்சராக இருப்பது பயன்மிக்கது .

அரசியலுக்கு வரமுன்னர் மதிக்கப்பட்ட நீதியரசர் இப்போது சாரயக்கடை போமிற்றில் வந்து நிற்கிறார். நீதிபதிகளை அரசியலுக்கு கொண்டு வந்தால் இது தான் நடக்கும். அரசியல் வேறு ! உத்தியோகம் வேறு !

1996ம் ஆண்டு தோண்டப்பட்ட செம்மணிப்புதைகுழிகளை சரியான முறையில் தோண்டி விசாரணை செய்திருந்தால் 2025 ம் ஆண்டு மீண்டும் அப்பகுதியில் தோண்டவேண்டிய நிலை வந்திருக்காது .

images/content-image/1763578601.jpg

பொங்குதமிழ் வ வுனியா விடயத்தில் சீருடையோடு பாடசாலை மாணவர்கள் கண்காட்சிக்குப் போகமுடியும் என்றால் , சுற்றுலா செல்ல முடியும் என்றால் மரண வீடுகளுக்கு செல்ல முடியும் என்றால் ஏன் பொங்கு தமிழ் நிகழ்வில் பங்கேற்க முடியாது?

நீதிபதி மனநிலையிலேயே செழியன் வாழ்கிறார் . சைவத்தமிழ்ச்சங்கம் சூரிச் சிவன் கோவிலில் நடந்த நிகழ்வில் பண்பாட்டு உடை இல்லாமல் கோட் சூட்டிலேயே செழியன் பங்கேற்றிருப்பது தமிழர் பண்பாடு கலாசாரம் பற்றிப் பேசும் செழியன் ஊருக்கு உபதேசம் உனக்கல்ல என்பது போல உள்ளது .

இளஞ்செழியனைவிட தமிழ்ததேசியம் சார்ந்த வழக்குகளில் ( குருந்தூர் மலை ) நீதிபதி பதவியையே தூக்கியெறிந்த நீதிபதி சரவணபவானந்தராசா மேன்மையானவர் இல்லையா ?

images/content-image/1763580297.jpg

இவரிலும் பார்க்க நீதிபதி ஏகநாதன் , நீதிபதி ஶ்ரீநிதி , உச்ச நீதிமன்ற நீதியரசர்ஶ்ரீபவன் , சட்டமாஅதிபதி கமலசபேஷன் , எல்லாவற்றுக்கும் மேலான சட்ட ஜாம்பவான் கலாநிதி சனாதிபதி சட்டத்தரணி கனகீஸ்வரன் போன்றோர் செய்தை விட , செழியன் அப்படி என்னத்தை செய்தார் ?

அதற்காக அவர் ஒன்றும் செய்யவில்லை என நான் சொல்ல வரவில்லை . நீதிபதி என்ற பதவி மட்டும் போதுமானதா ? தமிழ் அரசியல் தலைமையேற்க என்பது தான் வாதம் .எல்லாம் வாக்காளர்களின் கைகளில் மட்டுமே !

நன்றி
M MOHAN PARAN
SWISS-FACEBOOK

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!