பாணந்துறை குடு சலிந்துவின் போதைப் பொருட்களை விற்பனை செய்த யுவதி கைது!
#SriLanka
Mayoorikka
1 hour ago
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “பாணந்துறை குடு சலிந்து“ என்பவருக்கு சொந்தமான போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த யுவதி ஒருவர் ஹிரணை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஹிரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் களுத்துறை, பாணந்துறை, அருக்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரான யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் 27 வயதுடைய யுவதி ஒருவர் ஆவார். சந்தேக நபரான யுவதியிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனையில் சம்பாதித்த 36500 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
