பிரான்ஸில் மீண்டும் பிரதமராகும் செபாஸ்டியன் லெகோர்னு!
#SriLanka
#France
#budget
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 weeks ago
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக பதவியேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
எலிசி அரண்மனையில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள லெகோர்னு, ஜனாதிபதியால் எனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை ஏற்றுக்கொண்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் பிரான்சுக்கு ஒரு பட்ஜெட்டை வழங்கவும், நமது தோழர்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு பதிலளிக்கவும் எல்லாவற்றையும் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
