ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க தயாராகும் E3 நாடுகள்!
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான 2015 சர்வதேச ஒப்பந்தத்தில் இருந்து விலகிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஈரான் மீது கடுமையான பொருளாதார மற்றும் இராணுவத் தடைகளை மீண்டும் விதிக்க ஐக்கிய நாடுகள் சபை முடிவு செய்துள்ளது.
ஈரான் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சாட்டி ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி கடந்த மாதம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக இராஜதந்திர தீர்வைக் காண ஈரானுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பணியாற்றிய பல தூதர்களை திரும்ப அழைக்கவும் ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் முடங்கியதை அடுத்து இது வருகிறது.
இருப்பினும், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஸ்கோவ் ஐக்கிய நாடுகள் சபையில் தனது நாடு ஒருபோதும் அணு குண்டுகளை உருவாக்க முயற்சிக்காது என்று கூறினார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
