ஜிம்பாப்வே தொடர் - முதல் T20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெற்றது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதன்படி முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது அதற்கமைய 176 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஷ் ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களையும், குஷல் மெண்டிஸ் 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினர்.
இவர்களில் கமிந்து மெண்டிஷ் 16 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அபாரமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
அவருடன் இறுதி நேரத்தில் 9 பந்துகளில் 14 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்ற துஷான் ஹேமந்தவும் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கியிருந்தார்.
அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி 1 - 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



