பிரான்சில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 கிலோ கஞ்சா மீட்பு

#Arrest #France #drugs #Smuggling
Prasu
2 months ago
பிரான்சில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 கிலோ கஞ்சா மீட்பு

கார் சாரதி ஒருவர் தரிப்பிட அனுமதி இல்லாத இடம் ஒன்றில் அவரது காரை நிறுத்த முற்பட்டதை அடுத்து, அவர் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 36 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது.

Seine-Saint-Denis நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Allée Jules-Auffret பகுதியில் கார் நிறுத்தப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் குறித்த காரை நெருங்கினர். 

அப்பகுதியில் குறித்த காரை நிறுத்த அனுமதி இல்லை என்பதால், அவரை விசாரிக்கும் நோக்கோடு அவர்கள் நெருங்கியுள்ளனர். பின்னர் கார் சாரதியின் முன்னுக்கு பின் முரணான பதிலில் அவர் மீது சந்தேகம் எழுந்து, அவரது கார் சோதனையிடப்பட்டது.

அதில், அவரது காரில் 36 கிலோ எடையுள்ள கஞ்சா மறைத்து வைத்து எடுத்துச் செல்லப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த நபர் உடனடியாக கைது செய்யப்பட்டார். விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!