மன்னாரில் இரண்டாம் கட்ட காற்றாலை மின் திட்டப் பொருட்கள் கொண்டு வருகை – மக்களின் எதிர்ப்பால் பதட்டம்!
#SriLanka
#Mannar
#Power
#Public
#Wind
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Lanka4
4 weeks ago

மன்னாரில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்திற்கான காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கான பாரிய பொருட்கள், பொலீஸ் மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் ஏற்றி வரப்பட்டன.
இந்நிலையில், திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. பாரிய பாதுகாப்பு வலையுடன் பொருட்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக போக்குவரத்து தற்காலிகமாக பாதிக்கப்பட்டது.
பொலிஸார் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



