யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!
#SriLanka
#Accident
#Lanka4
#SHELVAFLY
Mayoorikka
2 days ago

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 7மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிச் சேதமடைந்ததுடன்-மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சிப் பகுதியில் இருந்து யாழ் நோக்கி வருகை தந்த காரும்-யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த டிப்பர்,கூலர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியனவும் ஒன்றோடு ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இதில் விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்திருப்பதுடன்-மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



