யாழில் குற்றப் புலனாய்வுத் துறையினரை பின் தொடரும் கடற்படை புலனாய்வு துறையினர்!

#SriLanka #Jaffna #Lanka4 #NavyOfficers #SHELVAFLY #ADDAFLY
Mayoorikka
1 month ago
யாழில் குற்றப் புலனாய்வுத் துறையினரை பின் தொடரும் கடற்படை புலனாய்வு துறையினர்!

யாழ். பருத்திதுறையில் காணாமல் போன தனிநபர்கள் குறித்து விசாரிக்கச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வருவதாக குற்றப் புலனாய்வுத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

 பருத்தித்துறையில் காணாமல்போன தொடர்புடைய ஒரு விஷயத்தை விசாரிக்க தங்கள் துறைஅதிகாரிகள் சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிள்களில் நான்கு நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்ததாகவும் இவர்களை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் என்பது உறுதி செய்யப்பட்டதாகவும்.

 அதனடிப்படையில் பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வு அதிகாரிகளிடம் விசாரணை செய்தபோது குற்ற புலனாய்வு பிரிவினரை பின்தொடருமாறு கடற்படை புலனாய்வுப் பிரிவின் லெப்டினன்ட் கமாண்டர் உத்தரவு பிறப்பித்ததாக அவர்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திற்கு மேலும் தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754259719.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!