வடக்கின் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சினையே காரணம்! பிரதமர்

#SriLanka #NorthernProvince #Vavuniya #Lanka4 #education #Harini Amarasooriya #SHELVAFLY
Mayoorikka
2 hours ago
வடக்கின் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சினையே காரணம்! பிரதமர்

வடமாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக பிரச்சினையை காரணமாக இருப்பதாக தெரிவித்த பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய விரைவில் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி தீர்வினை காண இருப்பதாகவும் தெரிவித்தார்.

 வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட கல்விசார் திணைக்களங்கள் மற்றும் பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

 ஆசிரியர்கள், அதிபர்கள் பற்றாக்குறை அவர்கள் எதிர்கட்சித பிரச்சனைகள் தொடர்பில் ஆசிரியர் தொழிற்சங்கங்கள், அதிபர் தொழிற்சங்கங்கள், கல்வி நிர்வாக அதிகாரிகள் சங்கம், மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை மட்டங்களில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிபர்கள் சிலரும் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர்.

 இக்கருத்துக்களை செவி மடுத்த பிரதமர் ஆசிரியர் நியமனங்கள் கடந்த ஐந்து வருடங்களாக நியமிக்கப்பட முடியாமல் இருப்பதற்கு அபிவிருத்தி உத்தியோதர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவ் வழக்கு விசாரணையில் இருப்பதே காரணம் எனவும் விரைவில் இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என எண்ணுவதாக தெரிவித்ததோடு அதன் பின்னர் ஆசிரியர் நியமனங்களை வழங்க எண்ணி இருப்பதாகவும் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754259719.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!