வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது - பிரதமர்!
#SriLanka
#PrimeMinister
#University
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Dhushanthini K
1 month ago

வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் மாணவர் அரசியலுக்கு எந்த வகையிலும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும் உறுதியளித்தார்.



