முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - இருவர் கைது

#SriLanka #Arrest #Mullaitivu #Alcohol #illegal
Prasu
11 months ago
முல்லைத்தீவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை - இருவர் கைது

விசுவமடு, மாணிக்கபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்புடன் வயோதிபர் இருவரும், சட்டவிரோத தாெழிலுக்காக பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, விற்பனை இடம்பெறுவதாக இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உப பொலிஸ் பரிசோதகர் சேனக்க, பொலிஸ் சார்ஜன்களான (69515) திலகரத்ன, (66171) ஜானக்க, பொலிஸ் கொஸ்தாபிள்களான (91451) குமார, (99801) புத்திக்க ஆகிய பொலிஸ் குழுவினர் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

அதன்போது விசுவமடு, மாணிக்கபுரம் பகுதியில் உள்ள கசிப்பு விற்பனை நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு விற்பனைக்காக போத்தலில் வைக்கப்பட்டிருந்த 30 லீற்றர் கசிப்பும், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளி ஒன்றும் கைப்பற்றப்பட்டதோடு அப்பகுதியில் எதுவித ஆவணங்களும் இன்றி இருந்த உந்துருளி ஒன்றும் கைப்பற்றப்பட்டதுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் விசுவமடு ரெட்பானா பகுதியைச் சேர்ந்த 51, 56 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் விசாரணையின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட இருக்கின்றனர்.

குறித்த கிராமத்தில் இளைஞர்கள், விளையாட்டுக் கழகங்கள், கிராம மக்கள் இணைந்து சட்டவிரோத சகிப்பு உற்பத்தியை ஒழிப்பதற்கு ஆர்வமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754160070.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4