டிக் டோக் குழுக்களால் குற்றங்களில் சிக்கும் சிறுவர்கள் - மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த

#SriLanka #Police #children #Crime #Social Media #TikTok
Prasu
2 hours ago
டிக் டோக் குழுக்களால் குற்றங்களில் சிக்கும் சிறுவர்கள் - மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த

டிக் டோக் குழுக்களில் ஈடுபடுவதால் சிறுவர்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதாக மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி, மகளிர் தலைமை பொலிஸ் ஆய்வாளர் வருணி கேசலா போகாவத்த தெரிவித்துள்ளார்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும்போது அவர்களை கண்காணிப்பது மிகவும் முக்கியம். டிக் டோக் தொடர்பான கடுமையான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக கடந்த ஒன்றரை மாதங்களில் 20 முறைப்பாடுகள் பெறப்பட்டது. சிறுவர்கள் இணையத்தில் டிக் டோக் குழுக்களில் சேரும் போக்கை நாங்கள் காண்கிறோம். 

இதன் மூலம், சிறுவர்கள் தங்களுக்கு அறியாமலேயே கடுமையான குற்றங்களில் சிக்குகின்றனர். டிக் டாக் குழுக்களில் சேரும்போது சிறுவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவது மிகவும் முக்கியம். அந்த டிக் டோக் குழுக்களில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர வேண்டாம். 

இந்த குழுக்கள் சில சிறுவர்களின் அந்தரங்க புகைப்படங்களைப் பெறுகின்றனர். அதனை கொண்டு பெற்றோர்களை மிரட்டி பணம் பறிக்கும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி, மடிக்கணினிகள் மற்றும் டேப்களை வழங்கும்போது, அவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்கவும். 

மேலும் சிறுவர்களை அவர்களின் அறைகளில் தனியாக இருக்க அனுமதிக்க வேண்டாம். சிறுவர்கள் தனியாக இருக்கும்போது, அவர்கள் கையடக்க தொலைபேசிகள் மூலம் டிக் டோக் குழுக்களில் சேர்ந்து கடுமையான குற்றங்களில் பாதிக்கப்படலாம். உங்கள் பிள்ளகைள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்கவும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754157804.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!