தற்கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க
#SriLanka
#Parliament
#government
#Member
#Threat
#Pension
Prasu
2 hours ago

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் உயிர் மாய்ப்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் பதிவில் எனது நாடாளுமன்ற ஓய்வூதியத்திலிருந்து கிடைக்கும் 68,000 ரூபாவைக் கொண்டு வாழ்க்கையை நடத்தவே நான் சிரமப்படுகிறேன்.
வாடகை, மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் மற்றும் மருந்துகளுக்கு பணம் செலுத்திய பிறகு, உணவு மற்றும் பிற தற்செயலான செலவுகளுக்கு ஒரு நாளைக்கு சுமார் 700 முதல் 800 ரூபா மட்டுமே என்னிடம் உள்ளது.
என்னைப் போலவே, ஜே.வி.பி, ஐ.தே.க., மற்றும் தமிழ் கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



