இடமாற்றம் ஏற்க மறுப்பதால் சம்பளத் தடை செல்லாது – விளக்கம்!

அரசாங்க சேவையில் உள்ள (ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் உட்பட) இடமாற்றங்களை ஏற்க மறுக்கும் உத்தியோகத்தர்களின் சம்பளத்தை இடைநிறுத்துவதற்கான எவ்வித சட்ட ஏற்பாடும் தாபனக் கோவையிலும், நிதி பிரமாணத்திலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமப்படுத்தல் இடமாற்றம் எனும் பெயரில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை என்றும், அரச சேவை ஆணைக்குழு அனுமதித்த இடமாற்றங்கள் கீழ்க்கண்டவையாக மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது:
வருடாந்த இடமாற்றம்
பரஸ்பர ஒத்துமாறல்
ஒழுக்காற்று காரணமீதான மாற்றம்
சேவையின் தேவை
மருத்துவ காரணம்
உத்தியோகத்தரின் வேண்டுகோள்
எந்தவொரு இடமாற்றமும் இடமாற்ற சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் மட்டுமே அமுல்படுத்தப்பட வேண்டும். அவசர தேவையின் பெயரில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள் பின்னர் சபையிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
இடமாற்றத்தை ஏற்க மறுக்கும் உத்தியோகத்தருக்கு மேன்முறையீடு செய்யும் உரிமை உள்ளது. மேலும், இவை ஒழுக்காற்று நடவடிக்கைகள் அல்லாத இடமாற்றங்களில் தண்டனையாக பயன்படுத்தப்படக் கூடாது.
சம்பளத்தை நிறுத்துவது என்பது ஒருவரது வாழ்வாதார உரிமையை மீறுவது என்றும், அது அவரின் அடிப்படை மனித உரிமைகளை ஊடுருவும் செயலாகக் கருதப்படும் எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



