கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர்கள் நடாத்திய 103வது சர்வதேச கூட்டுறவு தின விழா!

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவாளர்கள் நடாத்திய 103வது சர்வதேச கூட்டுறவு தின விழா கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று (31.07.2025) நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவு சபை தலைவர் அமரசிங்கம் கேதீஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவு சங்க பதிவாளருமான நடராஜா திருலிங்கநாதன் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் புஸ்பராணி புவனேஸ்வரன், வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்று அதிகாரி தாமோதரம்பிள்ளை சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மாவட்டத்திலுள்ள கூட்டுறவுச் சங்களின் தலைவர்கள், பொது முகாமையாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவுத் துறையில் 25வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
மேலும், கூட்டுறவு தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
கூட்டுறவுப் பணியாளர்களின் கலை நிகழ்வுகளும் நிகழ்வில் இடம்பெற்றன.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



