கிளிநொச்சியில் வங்கிக் கணக்கில் இருந்த பணம் திடீர் மாயம்: சுமார் 40 பேர் பாதிப்பு
#SriLanka
#Kilinochchi
#Bank
#Account
#ADDA
#ADDAADS
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
4 months ago
கிளிநொச்சி பகுதியில் செயல்படும் ஒரு அரச வங்கியில், பலரது வங்கிக் கணக்குகளில் இருந்த பணம் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரை சுமார் 40 பேர் வரை இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வங்கி நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டபோது, சம்பவம் தொடர்பாக உடனடியாக ஏதும் கூற முடியாத நிலையில் இருப்பதாகவும், மேலதிக விசாரணைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு மட்டுமே தெளிவான தகவல்கள் வழங்க முடியுமென வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், நிகழ்நிலை (online) சேவைகள் அல்லது வங்கி அட்டைகள் வழியாக நடைபெற்ற இணைய மோசடிக்கும்பலான நிகழ்வாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதொரு அவசியமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
