செம்மணி புதைகுழி! இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம்

செம்மணி புதைகுழியில் நேற்று புதிதாக மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிப்பதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெறும் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணியின் 26வது நாளான இன்று மேலும் 3 புதிய மனித எலும்பு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார் இதனுடன் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகளின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தமாக இதுவரை 118 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன அத்தோடு மூன்று மண்டையோட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் வழங்கபட்டுள்ளன.
இந்நிலையில் இதுவரை 105 மண்டையோட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு பாதுகாப்பாக சட்டவைத்தியரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்து 27ம் நாள் அகழ்வுப்பணி இன்று நடைபெறவிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



