நல்லூர் வீதியில் போடப்படும் மண் எங்கு சென்று நிரம்புகிறது?

நல்லூர் வீதிக்கு வருடாவருடம் 120ரக்ரர் மண் மண் வீதி அருகில் உள்ள குளங்களிலும் வாய்க்கால்களிலும் சென்று நிரம்புகிறது யாருக்கும் தெரியாதா ??
வருடாவருடம் அடியார்கள் நலன்கருதி ஆலய வீதியில் மண் பரவ வேண்டும் என்பதில் ஆர்வமெடுப்பவர்கள் வருடாவருடம் பரவப்படும் பல நூற்றுக்கணக்கான டிராக்டர்/ லாரி மணல் ஒவ்வொரு வருடமும் ஏன் தேவைப்படுகிறது? என்றோ அல்லது கடந்த வருடம் பரவப்பட்ட மண்ணுக்கு என்ன நடந்தது என்றோ சில கணமாவது சிந்திக்கவேண்டும்!
அந்த மணல் நல்லூரை சுற்றியுள்ள வாய்க்கால்களையும், குளங்களையும், நீர் நிலைகளையும் தான் வருடாவருடம் சென்றடைந்து நிரப்பிக்கொண்டிருக்கிறது. நல்லூரைச் சுற்றியுள்ள நீர் நிலைகள் கடைசியில் எப்போது தூர்வாரப்பட்டன என்றாவது ஒருகணம் சிந்தியுங்கள்.
நல்லூர் ஆலயத்துடன் தொடர்புபட்டதாக கருதப்படும் பிரமணக்கட்டுக் குளம்( Rio Icecream house அருகில் உள்ளது), வீரகாளி அம்மனுக்கு அருகில் உள்ள நொச்சிக்குளம், பண்டாரக்குளம், மணல்தறை கண்ணகி அம்மன்/அரசடி ஞாரவைரவர் ஆலயத்துக்கு அருகில் உள்ள குளம், சிவன் வீதியில் உள்ள குளம் உள்ளிட்ட நல்லூரை சூழ உள்ள குளங்களை சற்று எட்டிப் பார்க்கவும்!
வருடாவருடம் ஆவணியில் நல்லூர் வீதி சனக்காடாக மாறுவதும் பின்னர் மாரியில் வெள்ளக்காடாக மாறுவதும் வழமையாகிவிட்டது!
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



