எவ்வித மாற்றமும் இன்றி அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் மாத எரிபொருள் விலை

#SriLanka #prices #Fuel #petrol
Prasu
21 hours ago
எவ்வித மாற்றமும் இன்றி அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் மாத எரிபொருள் விலை

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்த விலைச் சூத்திரத்தின்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தற்போது, லங்கா வௌ்ளை டீசல் ஒரு லீற்றர் 289 ரூபாவுக்கும், லங்கா சூப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 325 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 95 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீற்றர் 341 ரூபாவுக்கும் 92 ஒக்டேன் ரக பெற்றோல் ஒரு லீற்றர் 305 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கமைய, எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேற்குறிப்பிட்ட விலைகளிலேயே எரிபொருள் விற்பனை தொடரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753995690.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!