கிளிநொச்சியில் விபத்து; பெண் பலி - சாரதியை தாக்கிய பொதுமக்கள்

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
21 hours ago
கிளிநொச்சியில் விபத்து; பெண் பலி - சாரதியை தாக்கிய பொதுமக்கள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை பெண்ணை, பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முயன்றதால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதியை பொதுமக்கள் தாக்கினார்கள். இதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான வீதி விபத்துக்கள் நடக்காமல் இருக்க வாகன சாரதிகள் மிக அவதானமாக வீதிகளில் வாகனங்களை செலுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753819667.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!