கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுப்பிடிப்பு!

கொஸ்கொடவில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொஸ்கொட அதுருவெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கொஸ்கொட, துவாமோதர பகுதியில் இன்று (31) அதிகாலை 5.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் 23 வயது இளைஞர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



