செம்மணியில் தாய் குழந்தை ஒன்றை அரவணைத்துக் கொண்ட என்பு தொகுதி மீட்பு!

#SriLanka #Jaffna #Lanka4 #SHELVAFLY #ADDAFLY #Semmani human burial
Mayoorikka
4 months ago
செம்மணியில் தாய் குழந்தை ஒன்றை அரவணைத்துக் கொண்ட என்பு தொகுதி மீட்பு!

செம்மணி புதைகுழியில் நேற்று 4 மனித என்பு எச்சங்கள் மீட்கப்பட்டதுடன், அதில் தாய் குழந்தை ஒன்றை அரவணைத்துக் கொண்ட என்பு தொகுதியும் மீட்கப்பட்டுள்ளது.

 செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெறும் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணியின் 25வது நாளான நேற்று மேலும் 4 புதிய மனித எலும்பு தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 இதனுடன் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகளின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. இதில் 102 தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்தார்.

 மேலும் பெரிய மனித எலும்புத் தொகுதியுடன் சிறிய குழந்தையின் மனித எலும்புத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரணித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார் இந்நிலையில் இன்றையதினம் 4 புதிய எலும்பு தொகுதிகள் அகழ்வு பிரதேசம் ஒன்றில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

 அத்துடன் நேற்று மூன்று மனித எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்பு தொகுதிகள் நீதிமன்றத்தின் கட்டுக்காவலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன.

 இன்றைய நாள் முடிவில் இதுவரை 115 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 102 எலும்பு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753819667.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை