இலங்கைக்கு கடத்துவதற்காக இருந்த 2250 கிலோ பீடி இலை பொதிகள் பறிமுதல்!

#SriLanka #Tamil Nadu #Crime #Lanka4 #SHELVAFLY
Mayoorikka
20 hours ago
இலங்கைக்கு கடத்துவதற்காக இருந்த  2250 கிலோ பீடி இலை பொதிகள்  பறிமுதல்!

ராமநாதபுரம் அடுத்த வெள்ளரிஓடை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட பீடி இலை பண்டல்களை மடக்கிப் பிடித்த கியூ பிரிவு பொலீசார். 

இது சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் வெள்ளரிஓடை பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து சமையல் மஞ்சள், சுக்கு, கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலை பண்டல்கள் உள்ளிட்டவைகள் அதிக அளவு இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் நேற்று அதிகாலை ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குநு கியு பிரிவு பொலீசார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

 அப்போது கண்டெய்னர் லாரி ஒன்றிலிருந்து இலங்கைக்கு பீடி இலை பண்டல்களை படகில் ஏற்றி கொண்டிருந்தபோது அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற போது கடலில் படகில் இருந்த இருவர் 10 மூட்டை பீடி இலை பண்டல்களுடன் கடல் வழியாக தப்பினார்.

 மேலும் பீடி இலை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி யை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வெள்ளரிஓடை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரை பிடித்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் மாலை ஒப்படைத்தனர்.

 மேலும் கடல் வழியாக தப்பிச் சென்று மர்ம நபர்கள் இருவர் குறித்து கியூ பிரிவு பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை


images/content-image/1753819667.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!