செம்மணி புதைகுழியில் மேலும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

#SriLanka #Jaffna #Lanka4 #SHELVAFLY #Semmani human burial
Mayoorikka
1 month ago
செம்மணி புதைகுழியில் மேலும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

 செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 24 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் செவ்வாய்க்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

 அதன் போது, 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 03 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 111 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 செம்மணி மனித புதைகுழி பகுதிகளை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டு தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் நேரில் பார்வையிட்டதுடன், துறைசார் நிபுணர்களுடன் புதைகுழிகளின் அகழ்வு பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். அதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில், ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதிகள் கிடைக்க தாமதிக்கப்படுவதால், ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை பெற்று அதனை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஸ்கான் நடவடிக்கை முன்னெடுக்கபடும் - என்றார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753819667.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!