மாலைத்தீவின் துணை சபாநாயகர் மற்றும் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் சந்திப்பு!

மாலைத்தீவின் துணை சபாநாயகர் மற்றும் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (29) குரும்பா மாலைத்தீவு ரிசார்ட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
அதன்படி, மாலத்தீவின் துணை சபாநாயகர் அகமது நசீம், வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லா கலீல், பொருளாதார மேம்பாடு மற்றும் வர்த்தக அமைச்சர் முகமது சயீத், பாதுகாப்பு அமைச்சர் முகமது கசான் மவ்மூன், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் மூசா சமீர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அலி இஹுசான் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர்.
மாலைத்தீவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டதற்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையே வலுவான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த விஜயம், எதிர்காலத்தில் ஆழமான ஒத்துழைப்பு, பரந்த புரிதல் மற்றும் சிறந்த நட்புறவுக்கு அடிப்படையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு. விஜித ஹேரத் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் குழுவும் இந்த கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



