பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

#SriLanka #Namal Rajapaksha #Hambantota #release #Politician #Court
Prasu
13 hours ago
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பிணையில் விடுதலை

அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட குற்றத்திற்காக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (28) மீண்டும் அழைக்கப்பட்ட போது, நாமல் ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் நாமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் காலை தனிப்பட்ட தேவைக்காக மாலைதீவுக்கு சென்றிருந்ததால், மீண்டும் நாடு திரும்பி பிடியாணை உத்தரவுக்கு எதிராக மனு தாக்கல் செய்து அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753814679.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!