யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் குடும்பத்தினர் சடலங்களாக மீட்பு
#Death
#family
#Politician
#PradeshiyaSabha
Prasu
14 hours ago

யடிநுவர பிரதேச சபை உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் (வயது 52), அவரது மனைவி (வயது 44) மற்றும் அவர்களது மகள் (வயது 17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி மற்றும் மகளின் சடலங்கள் வீட்டின் அறைகளில் இருந்தும் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



