பயங்கரவாத தடைச்சட்டத்தை தயாரித்த தந்தை செல்வாவின் மருமகன் அ.வில்சன்

#SriLanka #Tamil People #Law #Terrorism Act
Prasu
1 week ago
பயங்கரவாத தடைச்சட்டத்தை தயாரித்த தந்தை செல்வாவின் மருமகன் அ.வில்சன்

அல்பிரட் வில்சன் 1928 ஆம் ஆண்டில் கே. ஆர். வில்சன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்.கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இளங்கலைப் பட்டத்தை (இலங்கைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை இலண்டன் பொருளியல் பள்ளியிலும்பெற்றார்.

images/content-image/1753553081.jpg

வில்சன் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் மகள் சுசிலி என்பவரைத் திருமணம் புரிந்தார். 1978 முதல் 1983 வரை இலங்கை சனாதிபதி, ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கு அரசமைப்புச் சட்டத்தில் ஆலோசகராக இருந்தார்.

இவர்தான் 1979, யூண்,19, ல் நாடாளுமன்றில் நீதி அமைச்சர் கே டவிலியூ தேவநாயகத்தால் சமர்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை வரைந்தார் என கூறப்படுகிறது.

சட்டத்தை தயாரித்தவரும் தமிழரே, (தந்தை செல்வாவின் மருமகன் அல்பிரட் வில்சன்). சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்தவரும் தமிழரே,(கே.டவிலியூ. தேவநாயகம்). அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்து எதிர்த்து வாக்களிக்காமல் நழுவிச்சென்றதும் தமிழரே, (அ.அமிர்தலிங்கம் தமிழர் விடுதலை கூட்டணி).

அந்த சட்டத்தால் கூடுதலாக பாதிக்கப்பட்டவர்களும் தமிழரே என்ற வரலாறு இந்த பயங்கரவாத கொடியச்சட்டத்திற்கு உண்டு. ஏன் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது இப்போது புரிகிறது.

இந்த சட்டத்தை தயாரித்த தந்தை செல்வாவின் மருமகன் அல்பிரட் வில்சன் சிலவேளை அ.அமிர்தலிங்கத்திடம் எதிர்த்து வாக்களிக்க வேண்டாம். அது தற்காலிக சட்டம் என கூறியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

1979, யூண்,19, ல் நாடாளுமன்றில் சமர்பித்த இந்த கொடிய சட்டம் 2025, யூண்,19, 46, ஆண்டுகள் பூர்த்தி.. வரலாறுகளைத் தமிழ் மக்களும் தமிழ் இளைஞர்களும் அறியவேண்டும் என்பதற்காகவே எனது இந்த பதிவும்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1753553114.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!