முல்லைதீவில் தாயும், இரண்டு பிள்ளைகளும் உயிர் மாய்ப்பு: வெளியான காரணம் !
#SriLanka
#Death
#Mullaitivu
Lanka4
1 month ago

முல்லைத்தீவு, மாங்குளம் - பனிக்கன்குளம் உள்ள ஒரு கிணற்றில் நேற்று உடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட தாய் மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில் நேற்று உடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்த தாய்க்கு 38 வயது என்றும் பிள்ளைகளுக்கு 11 மற்றும் 3 வயது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் தற்போது வெளிநாட்டில் வசிப்பதாகவும், அவர் வீட்டிற்குப் பணம் அனுப்புவதில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



