மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை - மனித மோதலை தடுப்பதற்கான விசேட கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை - மனித மோதலை தடுப்பதற்கான முகாமைத்துவ குழுவினை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம் பெற்றது.
மாவட்டத்தில் நிலவும் யானை - மனித மோதலை தவிர்ப்பதற்கான உபாயமுறைகள் குறித்து முகாமைத்துவ குழுவில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும் யானை - மனித மோதல்கள் உள்ள பகுதிகளில் புதிய யானை வேலிகளை அமைத்தல், காவல் அரண்களை அமைத்தல், ஒருங்கிணைந்து நடமாடும் ரோந்துகளை மேற்கொள்ளுதல், இரவு நேர கண்காணிப்பு, வன பரிபாலண நிலையங்களை அமைத்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் 206.34 Km வேலிகள் காணப்டுவதுடன் எதிர்வரும் காலங்களில் மாவட்டத்தில் 96 Km வேலிகள் அமைப்பதற்கான முன்மொழிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
2020 / 2025 வரையான காலப்பகுதியில் மாவட்டத்தில் யானை - மதித மோதலினால் 63 மரணங்கள் இடம் பெற்றுள்ளதுடன் 89 யானைகள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், கிழக்கு பிராந்திய வனஜீவராசிகள் உதவி பணிப்பாளர் பிரசன்ன விமலதாச, உயர் அதிகாரிகள், விவசாய அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



